தாயகம் திரும்பும் இந்திய அணி.... நாளை இரவு தரையிறங்கும் வீரர்கள்!

 
இந்தியா


இந்திய அணி சர்வதேச டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப முடியா வண்ணம் பார்படாஸ் பகுதியில்  திடீர்  புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து 3 நாட்கள் ஆகியும் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் விரைவில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு அவர்கள் தாயகம் திரும்பலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடந்தது. இதில் இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி கோப்பையை வென்றது. இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்தியா
புயல் தீவிரமடையும் முன்பே தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அடுத்து இந்திய அணி வீரர்கள் கிளம்பும் முன்பு சூறாவளி தீவிரமடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.  ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு அருகே சூறாவளி தாக்கியதால் வீரர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த புயல் கிரேடு 3 என்ற நிலையில், இருந்து கிரேடு 4 என்ற ஆபத்தான நிலைக்கு  மாறியது. இதனால் பார்படாஸ் பகுதியில் தங்கியிருந்த இந்தியர்கள் எப்போது திரும்புவார்கள் என்று அறிய முடியாத சூழல் ஏற்பட்டது .  சூறாவளி பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒரு வழியாக இந்தியர்கள் தாயகம் திரும்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் பார்படாஸ் விமான நிலையம் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது .  விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட்
இன்று ஜூலை 2ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சிறப்பு விமானம் மூலம்  பார்படாஸில் இருந்து புறப்பட உள்ளது.  இந்திய நேரப்படி புதன்கிழமை ஜூலை 3ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு அங்கிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நாளை ஜூலை 3ம் தேதி இரவு 7.45 மணிக்கு இந்தியாவிற்கு வந்து சேர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அங்குள்ள சூழல்  மற்றும்  ஏர்போர்ட் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்தும் பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி  , "அடுத்த 12 மணி நேரத்தில் ஏர்போர்ட் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சூறாவளி கரையைக் கடந்த உடன் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.   விமான நிலையத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏர்போர்ட்டை திறக்க விரும்புகிறோம். விமான நிலையம் திறக்கப்பட்ட உடன் பலர் இங்கிருந்து புறப்பட உள்ளனர். அவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சொந்த ஊர் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தான் காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே இந்திய வீரர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web