இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
பாக்கர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் எஸ்.எம்.பாக்கரும் ஒருவர். நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரணால் அங்கிருந்து பிரிந்து பி.ஜெய்னுல் ஆபிதீனுடன் இணைந்து கடந்த 2004ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை எஸ்.எம்.பாக்கர் உருவாக்கினார்.

பாக்கர்
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆபிதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்ட எஸ் எம் பாக்கர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று அதன் பின்னர் வீடு திரும்பினார். 

இந்நிலையில், நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டகாரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ். எம். பாக்கர், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.பாக்கர் உடல் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!