கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

 
யுவராஜ் கோயல்

 பஞ்சாப் மாநிலம் லூதியானவில் வசித்து வந்தவர் யுவராஜ் கோயல் .  28 வயதாகும் யுவராஜ்  2019ல்  மேற்படிப்புக்காகக் கனடா சென்றிருந்தார்.   படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ்  பணியில்  சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவில்  செட்டிலானார்.  
இந்நிலையில்  ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை  காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஜூன் 8 ம் தேதி 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கனடா போலீஸ்

யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை நடந்தது என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று  எனத் தெரியவந்துள்ளது.இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனிநாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதில்  இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என கனடா குற்றம் சாட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web