இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றி பார்க்கலாம்... அதிரடி அறிவிப்பு!!

 
தாய்லாந்து விசா

 உலகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று  தாய்லாந்து. இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகம் முழுவதிலும் இருந்து  சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

தாய்லாந்து

வெளிநாடுகளிலிருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கு விசா சேவையை தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியர்கள் விசா பெறாமலே 30 நாட்கள் வரை தாய்லந்தில் தங்கலாம் . இந்த சலுகை   நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை  நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,.

விசா சுற்றுலா விமானம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவுக்கு விசா சலுகையை   அறிவித்திருக்கும் 2வது நாடாக  தாய்லாந்து அமைந்துள்ளது. இதற்கு முன் இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 7 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மார்ச் 31, 2024 வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web