செம... சென்னை “வொண்டர்லா” வில் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்!

 
வொண்டர்லா

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள்,  பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை ரிசார்ட்கள் என பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. எத்தனை  இருந்தாலும் எல்லாவற்றிலும் மக்கள் நிரம்பி வழிகின்றனர். விடுமுறை நாட்களில் விலக வழியில்லை என்னும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. வார மற்றும் தொடர்   விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு  மக்கள் படையெடுத்துவருகின்றனர்.


இந்நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்லது.  சுமார் ரூ.400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா சென்னையில் இருந்து வெறும் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைய  உள்ளது. ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைய இருக்கும் இந்த பூங்கா குறித்த அறிவிப்பால் இளசுகள் இப்போதே உற்சாகம் அடைந்துள்ளனர்.  

வொண்டர்லா

இந்தப் பூங்காவில்  இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. Bolliger & Mabillard எனும் ரோலர்  கோஸ்டர் சென்னையில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ள நிலையில் அவற்றை அசெம்பிள் செய்யும் பணிகள்  விரைவில் நடைபெற உள்ளதாக   வொண்டர்லா நிறுவனம் அதன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன் ரோலர் கோஸ்டரின் செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இணைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web