சூப்பர்... 10 ஆண்டுகளில் இந்தியாவுக்காக தனி விண்வெளி நிலையம்!
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் "சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணம் இந்தியாவின் 'ககன்யான்' உட்பட பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவையும், அனுபவத்தையும் அளித்துள்ளது. அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்.
இந்தியாவின் அடுத்த விண்வெளி திட்டம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்திய விண்வெளி வீரர்கள் முதல் முறையாக ஒரு இந்திய விண்கலத்தில் பயணம் செய்வார்கள். இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உட்பட நமது எதிர்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.

இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 2035ம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும். மேலும் அதற்கு 'பாரத் விண்வெளி நிலையம்' எனப் பெயரிடவும் முடிவு செய்துள்ளோம். சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது."
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
