நடுவானில் செயலிழந்த இண்டிகோ விமானம்... அவசர அவசரமாக தரையிறக்கம்!

 
இண்டிகோ
 


 சமீபகாலமாக இந்தியாவில் விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.  கடந்த மாதம் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்ததிலிருந்து விமானங்கள் தொடர்பான செய்திகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டன.  அந்த வகையில் இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே அதன் என்ஜின் செயலிழந்துவிட்டது.  இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட நிலையில் திடீரென அது அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. என்ஜின் செயலிழந்ததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. 

இண்டிகோ
புதன்கிழமை அன்று 6E 6271 என்ற இண்டிகோ நிறுவன விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. டெல்லியில் இருந்து கோவாவை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்து போனது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமானிகள் அருகில் மும்பை சர்வதேச விமான நிலையம் இருப்பதை அறிந்து உடனடியாக தகவல் அளித்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானிகள் ஒரு என்ஜினை வைத்து விமானத்தை இயக்கி சாமர்த்தியமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இண்டிகோ
இதனை அடுத்து வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அதில் கோவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  முன்னதாக டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் பார்ட்னா விமான நிலையத்தின் தரையிறங்கும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடுபாதை வருவதற்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தர இயக்கிய நிலையில் ஓடு பாதையின் நீளம் போதுமானதாக இல்லை என்பதை உணர்த்து மீண்டும் விமானத்தை டேக் ஆப் செய்தனர்.
 
இதனை அடுத்து இண்டிகோ விமானம் வானத்திலேயே மூன்று முறை வட்டமிட்டு பின்னர் பாதுகாப்பாக ஓடு பாதையில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர் . விமானிகளின் துரித செயல்பட்டால் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?