பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விவகாரம்.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!

 
வினோத்-சசிகலா

தூத்துக்குடி திருச்செந்தூர் ஆலந்தூர் ஆலமரத்துவிளையைச் சேர்ந்தவர்கள் வினோத்-சசிகலா தம்பதி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சசிகலாவை, கடந்த 6ம் தேதி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அன்று மதியம், சசிகலாக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

 குழந்தை

ஆனால், கடந்த 7ம் தேதி காலை குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அம்மா சசிகலாவும் கடந்த 8ம் தேதி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு கடந்த 9ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால், தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்று (மே 15) உயிரிழந்தது. டாக்டர் இல்லாததாலும், செவிலியர்களின் அலட்சியத்தாலும் குழந்தை இறந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை வினோத் மற்றும் உறவினர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் ராமேஸ்வரி, ரகுராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பாபநாச குமாரிடம் சசிகலா குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டு துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web