புதுக்கோட்டையில் 7 சிறை கைதிகள் திடீரென மருத்துவமனையில் அனுமதி... சிக்கன் சாப்பிட்டதில் உடல்நலக்குறைவு!
சிறைச்சாலையில் சிக்கன் சாப்பிட்ட கைதிகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், 7 கைதிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் 450 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கைதிகளுக்கு கடந்த திங்கட்கிழமை மதியம் வழங்கப்பட்ட சிக்கன் உணவால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிக்கன் சாப்பிட்ட பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட விசாரணைக் கைதிகள் தஞ்சாவூரைச் சேர்ந்த செங்கோல்சேசு (42), அறந்தாங்கியைச் சேர்ந்த உலகநாதன் (55), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு (44), தஞ்சாவூரைச் சேர்ந்த நேரு (57), ஆலங்குடியைச் சேர்ந்த சுப்ரமணி (58), ஒரத்தநாட்டைச் சேர்ந்த செல்வம் (31), மாமேல்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (28). ஆகிய 7 பேரும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியினால் துடித்தனர்.
இதையடுத்து, சிறையில் முதலுதவி சிகிச்சை அளித்தும் வயிற்றுப்போக்கு பிரச்னை குணமாகாததால், 7 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மற்ற கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!