இன்ஸ்டாவில் வேற லெவல் அப்டேட்... இளசுகள் அதிரடி!
சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான பயனர்கள் தினசரி பயன்படுத்தும் வலைதளமாக இன்ஸ்டா செயலி இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்கள் தான் இளசுகளின் டாப் மோஸ்ட் வாண்டட். இதனால் இளைஞர்கள் எந்நேரமும் ரீல்ஸ்களிலேயே இளைஞர்கள் மூழ்கி கிடப்பதை பார்க்க முடிகிறது.

விதவிதமான வீடியோக்கள் போட்டு அதிக லைக்ஸ் கமெண்டுகளையும் பெற ரொம்பவே மெனக்கெடுகின்றனர். பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையில் இன்ஸ்டா அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ரீல்ஸ்களை முழு தொடராக பார்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ரீல்ஸ்க்கு அடுத்து எந்த ரீல்ஸ் இடம் பெற வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
