திடீரென முடங்கியது இன்ஸ்டாகிராம்... பயனர்கள் தவிப்பு!

 
இன்ஸ்டாகிராம்

கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது பயனர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்ஸ்டா ரீல்களைப் பார்க்க முடியவில்லை என பயனர்கள் தங்களது தவிப்பைத் தெரிவித்து வருகின்றனர். கார்களின் படங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் காட்டும் ஃபீட் பக்கம் மட்டுமே தெரிவதாக பயனர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். 


மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் பயன்பாடு சரியாக வேலை செய்யவில்லை என்று பயனர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். #InstagramDown என ட்விட்டரிலும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். 


பயனர்களின் கூற்றுப்படி, அவர்களால் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்க்க முடியவில்லை. மாறாக, இன்ஸ்டாகிராம்  பக்கம் கார்களின் படங்கள் மற்றும் இயற்கை காட்சிகளைக் காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் செயலிழப்பை மெட்டா நிறுவனம் இதுவரை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.


இன்ஸ்டாகிராம் செயலிழந்ததா என்று பயனர்கள் பிற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web