நீட் தேர்வு ரத்துக்கு பதிலாக... மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து... அதிர்ச்சியில் மாணவர்கள்.. பெற்றோர்கள்!

 
திருச்சி மருத்துவ கல்லூரி கி.ஆ.பெ

தமிழ் நாட்டில் 46 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்து கல்லூரிகளுக்கும் நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் நவீன மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகள் ஆகியனவும் அடக்கம்.

மத்திய, மாநில அரசுகள் சார்பிலும், தனியார் சார்பிலும் மருத்துக் கல்லுாரிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள். 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பது உட்பட பல தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கல்லூரி களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அம்சங்கள் உள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. உரிய விதிகளை பின்பற்றாத கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ கமிஷன் எச்சரித்திருந்தது.

சுப்ரமணியம்

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி கிஆபெ விஸ்வநாதன் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக பணியாளர்கள் வருகைக்காக ஆதார் அட் டையுடன் கூடிய பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வகங்களில் போதிய வசதிகள் இல்லை எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிந்து அட்மிஷன் நடக்கவுள்ள நிலையில் திருச்சி மருத்துவக் கல்லுாரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.

திருச்சி மருத்துவ கல்லூரி கி.ஆ.பெ

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும் என்பார்கள். கிராமங்களில் கட்டிடம் பளபளப்பாக இருந்து என்ன பிரயோஜனம். உள்ளே விஷயம் இருக்க வேண்டாமா என ஒரு சிலர் கேள்வி கேட்க, இன்னொரு தரப்பினரோ இது மத்திய அரசின் பழி வாங்கும் செயல் என்கிறார்கள். எது உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

கடலுக்குள்ள பேனாவும், புல்லட் ட்ரெய்னும், கோடிக்கணக்குல பணத்தைக் கொட்டி நூலகமும் எல்லாம் வேணாங்கய்யா... அந்த புத்தகங்களைப் படிக்க, கல்வி கண் திறந்த காமராஜரைப் போல எங்களுக்கு படிக்க வசதி செஞ்சு தாங்க.. என்று வெள்ளந்தியாக கேட்கிறார்கள் மக்கள். நீட் தேர்வு ரத்து என்கிற எதிர்பார்ப்பில் ஒற்றைச் செங்கல்லைப் பார்த்து வாக்களித்த மக்களின் காதுகளில் மட்டுமல்ல.. காதுக்குள்ளும் முழம் பூ தான்’ என்கிற பேச்சை டீக்கடை பெஞ்சுகளிலும், சலூன்களிலும் இனி ஒலிக்கப் போகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

 

From around the web