போதிய ஆதாரமில்லை... அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை!

 
பொன்முடி

போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி, அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தூசு தட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி மீது நில அபகரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த நிலையில், ஆதாரமில்லை என கூறி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்தார். அப்போழுது, சைதாப் பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து மாமியார் சரஸ்வதி பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உட்பட 10பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கடந்த 2003ல் வழக்குப்பதிவு செய்தனர்.

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் தேர்வு:  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகிய மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, பொன்முடி உட்பட மற்ற ஏழு பேர் மீதான வழக்கில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90க்கும் அதிகமான சாட்சிகள் அரசுத்தரப்பில் விசாரிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டன.

பொன்முடி

வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் இன்று ஜூலை 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி ஜெயவேல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் போதிய ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லாததால் இருபதாண்டுகளாக நீடித்து அந்த இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web