தீவிர வேட்டை.. 2 பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் பலி.. பாதுகாப்பு படையினர் அதிரடி!

 
நக்சலைட்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பெரிமிலி தாளம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை ஆயுதப் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு வரும் மாதங்களில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் நக்சலைட்

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கடரங்கட்டா கிராமம் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநிலத்தின் சி-60 கமாண்டோ பிரிவு மற்றும் கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நக்சலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு முடிந்ததும், இரண்டு பெண் நக்சலைட்டுகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர்.உயிரிழந்தவர் நக்சலைட் கமாண்டர் வாசு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி, இன்சாட்ஸ் துப்பாக்கி மற்றும் நக்சலைட் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சலைட்

விசாரணை நடந்து வருவதாக போலீசார் அறிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 70க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web