போதையில் அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுனர்... நடுவழியில் நிறுத்திய பயணிகள்!

 
பேருந்து

கோவை மாவட்டம் அவிநாசியில் அரசு பேருந்து ஓட்டுனர் மதுபோதையில் அரசுப்பேருந்தை இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் பாதிவழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உதகையில் இருந்து பயணிகளுடன் அரசுப் பேருந்து அவிநாசி வழியாக துறையூர் நோக்கி திங்கட்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம்  வரும்போது தாறுமாறாக பேருந்து சென்றுள்ளது.

பேருந்து
பயணிகள் ஓட்டுநரை கவனித்தபோது மது போதையில் இருப்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து அவிநாசி கருவலூர் அருகே வந்தபோது பேருந்தைப் பயணிகள் பாதியிலேயே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்குப் பிறகு மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்களது இருப்பிடத்துக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டாலும் உயிருக்கு எவ்விதபாதிப்பும் இன்றி உயிர் தப்பியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பேருந்து
இதனால் கருவலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ஓட்டுநர் மதுபோதையில் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு  போக்குவரத்து துறையினரிடம் தெரியப்படுத்தினர். மாற்று ஓட்டுநர் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web