போலீசை தாக்கி பேட்ச், செல்போன், ஹெட்செட்டை உடைத்து அமர்க்களம்... போதையில் இளம்பெண் அட்டகாசம்... !!

 
ரேகா

சென்னை விநாயகபுரத்தில் வசித்து வருபவர்  26 வயது இளம்பெண் ரேகா . இவர் நள்ளிரவில் குடித்துவிட்டு போதையில்   மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தார்.   மாதவரம் பகுதியில் உள்ள புத்தகரம்  பகுதிக்கு வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்  அப்பெண்ணை  பெரம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போதையில் இருந்த ரேகா, அங்கு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்தார்.

ரேகா

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை விரைந்த  காவல்துறையினர் ரேகாவிடம் விசாரணை நடத்தினார். அவர் போதையில் காவல்துறையினரையும் தரக்குறைவாக பேசினார். மேலும், ஒரு பெண் போலீஸைத் தாக்கி அவரது பேட்ஜ், செல்போன் ஹெட்செட் அனைத்தையும் பிடுங்கி கீழே போட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டார்.  பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

ரேகா
போதையை தெளிய வைத்த பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், ரேகா சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.  தற்போது  அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன்  தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரேகா ஆபாசமாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!