தலைக்கேறிய போதை... முந்தானையால் ராணுவ கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!

 
 வேளாங்கண்ணி தாஸ்

தலைக்கேறிய போதையில் கணவன் தொடர்ந்து தகராறு செய்து வந்த நிலையில், சேலை  முந்தானையால் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, மருத்துவமனைக்கும் கொண்டு சென்றிருக்கிறார் மனைவி. போலீசாரின் விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டதில், மொத்த உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார். ஆவடி அடுத்த பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை ராணுவ குடியிருப்பில் வேளாங்கண்ணி தாஸ் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் நிறைய குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவது வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மே- 10ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்த போது, ​​வாக்குவாதம் முற்றி மனைவி நீமா ரோஸ் மேரி தனது கணவரை சேலையால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, அதிகளவில் மதுவை உட்கொண்டதால், தலைக்கேறிய போதையில் அவர் சுயநினைவை இழந்தார் என்று ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

வேளாங்கண்ணி தாஸை ராணுவ மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில், தகவலறிந்த முத்தா புதுப்பேட்டை போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது, போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ராணுவ வீரரின் மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர்.

தற்கொலை

கணவர் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால், கணவர் தொல்லை தாங்க முடியாமல் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக நீமா ரோஸ் மேரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மீது முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இராணுவ வீரர் ஒருவரின் மனைவி, புடவையால் கணவரை கழுத்தை நெரித்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web