தோனி- ரோகித் வெற்றி யாருக்கு? இன்று பலப்பரீட்சை!!

 
சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2023 தொடரின் 49ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்கம் முதலே இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஐபிஎல் நடப்பு சீசனில் இரண்டு வெற்றிகரமான அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் நடத்தியது. அந்த போட்டியில் ரஹானே அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றிபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அந்த தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்ததைவிட மும்பை அணி இப்போது அசுர பலத்தில் உள்ளது. வீரர்கள் அடுத்தடுத்து பார்ம்க்கு வந்துவிட்டனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையேயான சாதனை பட்டியலை தயார் செய்துள்ளோம். 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 15 முறையும் வெற்றி கண்டுள்ளது. 

விளையாடிய போட்டிகள் – 35
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் – 15
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் – 20

அதுவே, சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கைதான் ஓங்கியுள்ளது. இதுவரை இந்த மைதானத்தில்  இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் 5 முறை மும்பை அணியும், 2 முறைதான் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த 5 போட்டிகளின் நிலைமை என்ன? 
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web