ஐபிஎல் 2025 மினி ஏலம் டிசம்பர் 16 ... கொல்கத்தா அணியில் பெரிய மாற்றங்கள்!

 
kolkatta

19வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தக்கவைக்கப்படுவோர் மற்றும் விடுவிக்கப்படுவோர் பட்டியலை நாளைக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், அணிகளுக்கிடையில் வீரர் பரிமாற்றமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

18வது சீசனில் சாம்பியன்களாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, எதிர்பாராத வகையில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் முடித்தது. இதனால் அடுத்த சீசனுக்காக அணியை பலப்படுத்த, கொல்கத்தா நிர்வாகம் பெரிய மாற்றங்களுக்கு முன்வந்துள்ளது. முதலில், தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் விலகியதால், அவரது பதவிக்கு அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். துணை பயிற்சியாளராக ஷேன் வாட்சனும் இணைந்துள்ளார்.

புதிய மாற்றங்களின் தொடர்ச்சியாக, நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான டிம் சவுதி கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சர்வதேச அனுபவம் அணியின் பந்துவீச்சுத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்பது அணியின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!