பகீர் வீடியோ... மைதானத்தில் கம்பீருடன் விராட் கோலி சண்டை...பிசிசிஐ நடவடிக்கை!

 
கோலி

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக கோலி, கேப்டன் டு பிளசிஸ் களமிறங்கினர். கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ‘கேப்டன் டு பிளசிஸ் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிதான இலக்கு என்பதால் லக்னோ வெற்றிபெறும் என தொடக்த்தில் கணிக்கப்பட்டது.


ஆனால் லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்களும் நிலைத்து நிற்காமல், பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களின் இலக்கில் வீழ்ந்து வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆனால், போட்டிக்கு பின்புதான் மைதானமே பரபரப்பானது. போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் நவீன் உல் ஹக்குக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது. சக வீரர்கள் இருவரையும் பிரித்து அனுப்பி வைத்தனர். ஏற்கெனவே பெங்களூரு அணி பில்டீங் செய்யும் போது அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. நடுவர் சமாதானம் செய்து வைத்தார்.

கோலி

போட்டி முடிந்த பிறகு மைதானத்துக்குள் வந்த, லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோலி - கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். 

மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. கோலிக்கு போட்டியின் முழு ஊதியத்தையும் அபராதமாக விதித்துள்ளது. அதேபோல் கவுதம் கம்பீருக்கு 50 சதவிகிதம் ஊதியமும், நவீன் உல் ஹக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web