ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது? குஜராத்- மும்பை படைகளின் பலம், பலவீனம் என்ன?

 
ஐபிஎல்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு செல்லும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று கலைகட்டவுள்ளது. 

இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி - ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல்

லீக் போட்டிகளில் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்து பட்டியலில் முதல் இடம் பிடித்தது குஜராத். 14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் வெற்றி வெற்று நான்காவது இடம் பிடித்தது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கம் பேக் கொடுத்த மும்பை அசுர பலத்தில் ஆறாவது கோப்பைக்கு மல்லுகட்டுகிறது. ஆர்ச்சர், பும்ரா போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாதது சற்று பின்னடைவு தான்.

பேட்டிங்கில் திலக் வர்மா, க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதே வேளையில் ஓபனர்களான ஹிட் மேன் ரோஹித், இஷாந்த் கிஷன் ஆகியோர் ஒரு சில போட்டிகளில் அதிரடி காட்டியுள்ளனர். எனினும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகிறது. 

சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்தாலும் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை தக்கவைக்க குஜராத் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பில் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தாலும் இறுதி கட்ட ப்ரஸரை எதிர்கொள்ள இன்னமும் வீரர்கள் சிரமப்படுகின்றனர். 

ஐபிஎல்

பந்துவீச்சில் நட்சத்திர வீரர் சமி பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கில்லாடியாக செயல்படுகிறார். நூருல் மற்றும் மொஹித் ஷர்மா ஆகியோர் கைகொடுத்தால் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம். சுழல் ஜாம்பவான் ரஷித் கான் எப்போதும்போல் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமி 26 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஓபனர் கில் இரண்டு சதங்களை விளாசி 722 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பிற்கு மிக அருகில் உள்ளார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தும் குஜராத்தை சமாளிக்குமா மும்பை என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் குஜராத் ஒரு வெற்றியும், மும்பை ஒரு வெற்றியும் பதிவு செய்து சமபலத்துடன் உள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web