20 நாட்களுக்கு பிறகு ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்!

 
விமான


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர்ந்து 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஈரானும், இஸ்ரேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த மோதல் முடிவுக்கு வந்தது. 

விமான

இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 20 நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் இன்று தரையிறங்கியதாக ஈரானின் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். 

விமான
இதன்மூலம் ஈரானின் விமான போக்குவரத்து துறையின் ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறியுள்ளார்.  இஸ்ரேலுடனான சமீபத்திய போர் பதற்றங்களுக்கு பிறகு, இஸ்ரேல் தனது வான்வெளியை அமைதியாகவும், புத்திசாலித்தனமானகவும் நிர்வகித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?