விபத்தில் ஈரான் அதிபர் மரணம்... இந்திய பிரதமர் மோடி இரங்கல்!

 
இப்ராஹிம் ரைசி
 

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அந்நாடு அறிவித்துள்ள நிலையில், அவரது திடீர் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கல் செய்தியில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.


இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். உலக தலைவர்கள் பலரும் ஈரான் அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!