ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம்!? நேட்டோ உச்சி மாநாட்டிற்கு கிளம்பிய ட்ரம்ப்!

ஈரான் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மீறல் செய்ததாக குற்றம்சாட்டின. 11-நாட்களுக்கு பிறகு அங்கு நிலைமை கொஞ்சம் அமைதியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப், இரு தரப்பையும் கண்டித்து, அமைதியை காக்குமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு அமைதியான சூழல் மெல்ல மெல்ல திரும்பி வருவதாக தெரிகிறது.
ஜூன் 24ம் தேதி நெதர்லாந்தில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில், ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “இஸ்ரேலும் ஈரானும் போரை நிறுத்த விரும்பினர்” என எழுதியிருந்தார். ஈரானின் அணு ஆயுதத் தளங்களை இஸ்ரேல் அழித்ததாகவும், அதன் பின் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், அமெரிக்க உளவுத்துறை, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை, சில மாதங்களுக்கு மட்டுமே தாமதமாகியிருக்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரான் ஒப்பந்தத்தை மீறாவிட்டால் இஸ்ரேல் அதை மதிக்கும் என்று உறுதியளித்தார். அதேபோல், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்ஸேகியன், இஸ்ரேல் மீறாவிட்டால் ஈரான் ஒப்பந்தத்தை பின்பற்றும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ட்ரம்ப், நேட்டோ மாநாட்டில், உறுப்பு நாடுகள் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார். தற்போதைய 2% ஜி.டி.பி. செலவுக்கு பதிலாக 5% ஆக உயர்த்துவது குறித்து பேசவிருக்கிறார். இந்த மாநாட்டில் இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நேட்டோ தலைவர் மார்க் ருட்டே, ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஜூன் 2 வரை நடைபெறும் மாநாட்டிற்காக அவர் சென்றிருக்கும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? என கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக போர் நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!