ஆப்கான் வீரருடன் குத்தாட்டம் போட்ட இர்பான் பதான்.. இணையத்தில் வைரலாகும் நடன வீடியோ..!

13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி களமிறங்கி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#WATCH | சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் நடனமாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்!#SunNews | #CWC2023 | #PAKvsAFG | #Chepauk | #IrfanPathan pic.twitter.com/RXduPvnBjQ
— Sun News (@sunnewstamil) October 24, 2023
இதனைத்தொடர்ந்து சேப்பாக்க மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்தனர். ரசிகர்களும் அளவல்லா உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதனிடையே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் உற்சாக நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!