ஏடிஎம்மில் இரும்புத் தகடு வைத்து நூதன முறையில் கொள்ளை!
சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருபவர் 39 வயது சீனிவாசன். இவர் பணம் எடுப்பதற்கு முன்பாகவே பணம் எடுத்த மாதிரி அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு நபர் வந்து தனது ஏடிஎம் கார்டை மெஷினில் செலுத்தி பணம் எடுப்பதற்கு முன்பே அவரது செல்போனில் பணம் எடுத்துவிட்டதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சீனிவாசன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த சிலர், பணம் வரவில்லை. ஆனால் பணம் எடுத்துவிட்டதாக செல்போனுக்கு தகவல் வருகிறது. என்னவென்றே அவர்களுக்கு தெரியவில்லை. மெஷினில் ஏதாவது பிரச்னையா’ என புலம்பியபடி சென்றுள்ளனர். இதை கவனித்த வங்கி அருகே மளிகை கடை நடத்திவரும் சந்திரசேகர் வங்கி அதிகாரிக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். சந்திரசேகர் சென்று, ஏடிஎம் முழுவதும் போட்டோ எடுத்து அவற்றை போலீசாருக்கு சந்திரசேகர் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த போட்டோவை அதிகாரி பார்த்தபோது ஏடிஎம் மெஷினில் பணம் வரும் வழியில் இரும்பு தகடு வைத்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதையடுத்து வங்கி தரப்பில் இருந்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏடிஎம் பகுதியில் இருந்து சிலர் ஓட்டம் பிடித்தனர். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டபோது அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா(20) என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏடிஎம்மில் நூதனமுறையில் பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சென்னை இடங்களில் உள்ள ஏடிஎம்மில் பணம் வரும் வழியில் இரும்பு தகடுகளை வைத்துவிட்டு வெளியே காத்திருப்போம். யாராவது பணம் எடுத்துவிட்டு பணம் வரவில்லை என சென்றுவிடுவார்கள்.உடனே நாங்கள் சென்று அந்த இரும்பு தகட்டை அகற்றிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வைத்துவிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.சிவா மீது வழக்குபதிவு செய்து அவரிடம் இருந்து 2000 மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 செ.மீ நீள இரும்பு தகடு இவைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
