ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு இத்தனைப் பயன்களா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

 
நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி

காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பானது பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பின் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு வாட், ஜிஎஸ்டி, சுங்க வரி என்று 17 விதமான வரிமுறைகள் அமலில் இருந்தன. அவை அனைத்தும் ஜிஎஸ்டி என்று ஒரே வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அதன் 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு என்ன பயன் என்று விளக்கமளித்திருந்தார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால் வாடிக்கையாளர்கள், ஒரு பொருளுக்கு 31 சதவிகிதவரி செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அந்த வரிகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடையே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. 2018 ஏப்ரல் 1ம் தேதி அன்று ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.03 கோடியாக இருந்து. இப்போது 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஜிஎஸ்டி வரி முக்கிய பங்கு வகிக்கிறது. வரி சட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் மாதம் தோறும் ரூபாய் 1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதி கபட்சமாக ரூபாய் 1.87 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி வரி வசூலானது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web