ஜூன் – ஜூலையில் பள்ளி ஆண்டு விடுமுறை? பொதுமக்களிடம் கருத்து கேட்பு!

 
மாணவிகள்


கேரள மாநிலத்தில் அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பரிசீலணை நடைபெற்று  வருகிறது. இது குறித்து கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி, இந்த மாற்றத்திற்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி  ஏப்ரல்-மே மாதங்களில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது.  ஜூன்-ஜூலை மாதங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் அடிக்கடி மூடப்படுவதால் பாடங்கள் பாதிக்கப்படுகின்றன.  

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு
இந்த மாற்றத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்படுகின்றன.  காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன்-ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படுவதால், பள்ளிகள் அவ்வப்போது மூடப்படுகின்றன. இதனால், கல்வியாண்டில் தேவையான 1,100 மணி நேர கற்பித்தல் மணிநேரங்களை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது.  

சிபிஎஸ்இ மாணவிகள்
 மே-ஜூன் மாதங்களுக்கு விடுமுறையை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றம், கேரளாவின் கல்வி அட்டவணையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு மாநிலத்திற்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு விதிமுறை மாற்றங்கள் தேவைப்படும். மாவட்ட ஆட்சியர்கள், கனமழை நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதால், கல்வி நாட்கள் இழக்கப்படுவதாகவும், இது மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியை பாதிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பேஸ்புக் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?