போதை நகரமாகிறதா தமிழகம்?! கஞ்சா விற்ற 2 பேர் கைது!

 
கஞ்சா விற்பனை

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனஜோராக சமீபமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை குறித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை நடந்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மெஞ்ஞானபுரம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். 

கஞ்சா கடத்தல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கென்னடி மேற்பார்வையில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர்  அனிதா தலைமையில் சார்பு ஆய்வாளர்  சண்முகராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மெஞ்ஞானபுரம் JJ நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

அதில், திருநெல்வேலி ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த லூர்துராஜா மகன் ஜோசப் டேனியல் (23) மற்றும் தூத்துக்குடி உடன்குடி தங்கநகரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஜெபக்குமார் (25) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது  தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 95 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web