நடுரோட்டுல செய்யுற காரியமா இது? காதல் ஜோடியின் லீலைகளால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்!

 
ஸ்கூட்டர்

தினமும் சாலை விதிகளை மீறும் பலர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இன்னும் சில இளம் பெண்களும் ஆண்களும் மாறுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய வைரல் வீடியோ வேகமாக பரவி வருகிறது.  இந்த வைரலான வீடியோவில் ஒரு இளைஞன் ஸ்கூட்டர் ஓட்டுவதை நாம் காணலாம். இது சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர். அவருக்குப் பின்னால் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள்.

இந்த ஆணும் பெண்ணும் எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். ஸ்கூட்டரில் 3 பேர் பயணம் செய்வதுதான் முதல் தவறு. மேலும், அவர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. இது போதாதென்று ஆணும் பெண்ணும் பின்னால் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டே பயணிப்பதையும் பார்க்கலாம். அவர்கள் காதலர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

 இது அப்பட்டமான விதி மீறல் என்பதால், வைரலான வீடியோவில் பதிவான ஸ்கூட்டரின் பதிவு எண்ணின் அடிப்படையில் காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. அதன்பேரில், ஸ்கூட்டரில் பயணம் செய்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் அகமதாபாத் நகரில் நடந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web