தமிழகத்தில் குண்டர் சட்டம் நல்லதா? கெட்டதா? காலத்தின் சதுரங்க விளையாட்டு!

 
அடியாள் ரவுடியிஸம் ரவுடி ரெளடி கொலை வழிப்பறி கும்பல் க்ரைம்

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்பு சட்டத்தில் உள்ள முக்கிய சட்டம் தான் குண்டர் தடுப்பு சட்டம். பொதுவாக, குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்வார்கள். இது தான் இதுநாள் வரை  நடைமுறை. ஆனால், குண்டர் சட்டப்படி குற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றால், அந்த குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பே அதை தடுக்க அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். 

1982ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி போதைப்பொருள் குற்றங்கள், பாலியல் தொழில் குற்றங்கள், மணல் திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்கிறார்கள். குண்டர் தடுப்பு சட்டம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது அலி ஜின்னா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கடுமையான குற்றங்களாகவும், பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாகவும் இருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே இனி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நபர்கள் மீது தான், குண்டர் சட்டத்தில் அடைக்கும் உத்தரவு கலெக்டர்களால் பிறப்பிக்கப்படுகிறது.

கார்த்

இதில் பெரும்பாலான வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்கிறது. எனவே, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் முன்பு போலீசார் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் உத்தரவு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யும் வாய்ப்பு குறையும் என்பதை இதன்மூலம் உறுதி செய்ய முடியும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்குவதும் தடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

அரசு வழக்கறிஞர்  கடிதம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசிய பொழுது மறைந்த முதல்வர் எம்ஜி.ஆர் ஆட்சியில் 1982ல் கொண்டு வரப்பட்டது தான் குண்டர் தடுப்பு காவல் சட்டம் சட்ட விரோதமாக மது தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை செய்வது. வன்முறையை தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது. வழிப்பறியில் ஈடுபடுவது போன்றவற்றை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனை வழங்கவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகரங்களில் காவல்துறை ஆணையரும் மற்ற இடங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரை ஓராண்டு வரையில் சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்த விசாரணையும் நடந்த தேவையில்லை. ஜாமீனிலும் வெளிவர முடியாது. அவரை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. அதே நேரம், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், நிபந்தனைகளை மீறினால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம்.

சைலேந்திரபாபு

இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன் மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் அவர் சார்பில் வழக்கறிஞர் வாதாட முடியாது. அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், முறையீட்டு குழுவைத் தான் அணுக வேண்டும். இக்குழுவானது ஒரு நீதிபதி, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட்டது சரியா இல்லையா என நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுக்கும். அதன் பேரில் நடவடிக்கை இருக்கும் என்றார். இதற்கிடையே, 2006ம் ஆண்டில் சினிமா துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார்.

இச்சட்டம் தேவையா இல்லையா என்பது குறித்த விவாதம் ஒருபுறம் இருக்க காவல்துறையினர் இந்த சட்டத்தினால் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். இப்படி குண்டர் சட்டத்தை பயன்படுத்தி ஒரு நபரை கைது செய்ய கிட்டத்தட்ட அரசு கொடுப்பது 12,000 ரூபாய் மட்டுமே. ஆனால் 25,000 ரூபாய் தங்களின் கைப் பணம் செலவாகிறது.

அப்பாடா... தப்பித்தோம் என மகிழ்ச்சி அடைபவர்களும், இனி உண்மையாக தவறு செய்பவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாதே என வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள்.  இது நல்லதா கெட்டதா என்பதற்கு காலம் விளையாடும் சதுரங்க விளையாட்டு தான் பதில் சொல்ல முடியும். மக்களுக்காக தான் எல்லா சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன... இயற்றப்படுகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!

From around the web