இஸ்ரேல், காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் சாதகமான பதிலால் பொதுமக்கள் உற்சாகம்!

 
இஸ்ரேல், காஸா


 
காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் குறித்த   முன்மொழிவுக்கு ஹமாஸ் சாதகமான பதிலை அளித்துள்ளது.  இதற்கான முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, 2023-ல் தொடங்கப்பட்ட போர் முடிவுக்கு வருகிறது எனில்  பேச்சுவார்த்தைக்கு முழுமையாக தயாராக இருப்பதாக மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல், காஸா
இதுகுறித்து, ஹமாசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன - அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, இந்த சபிக்கப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வருவதை நெருங்கி விட்டோம். முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.  

இஸ்ரேல், காஸா
இந்நிலையில் ஹமாஸின் பதில் வெளிவந்த பிறகு  அடுத்த வாரமே காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்  என அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில் இன்று  ஹமாஸின் சாதகமான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?