காசாவில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி!

இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது ஜூன் 30ம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், மற்றும் செய்தியாளர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகம், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்தது.ஹமாஸ் நடத்தும் காசாவின் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர், அல்-பாகா உணவகத்தில் அமைந்திருந்த கூடாரங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 20 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
திடீர் வெடிப்பால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. “நான் உணவகத்திற்கு இணைய இணைப்பு பயன்படுத்தச் சென்றபோது, மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. எனது சகாக்கள், தினமும் சந்திக்கும் மக்கள் அங்கிருந்தனர். காட்சி பயங்கரமாக இருந்தது – உடல்கள், ரத்தம், எங்கும் கூக்குரல்,” என உள்ளூர் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நாடு முழுவதும் நடத்திய வான்தாக்குதல்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இது நூற்றுக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்களை இடம்பெயர வைத்தது. இஸ்ரேலிய இராணுவம் இதுகுறித்து உடனடி கருத்து தெரிவிக்கவில்லை. இந்தத் தாக்குதல், மார்ச் மாதம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் தொடங்கிய போரின் ஒரு பகுதியாக நடந்தது. காசாவில் மோதல் தீவிரமடைந்து வருவதால், சமாதான ஒப்பந்தத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 54,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்தத் தாக்குதல்கள், காசாவில் 90% மக்களை இடம்பெயரச் செய்து, பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் ஈரான் போர் ஒரு பக்கம் நின்றாலும் காசா இஸ்ரேல் போர் நிறக்காமல் இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!