சிரியா எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்... மக்கள் வெளியேறுங்க... நெதன்யாகு எச்சரிக்கை.!

 
சிரியா எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்... மக்கள் வெளியேறுங்க... நெதன்யாகு எச்சரிக்கை.!

சிரியாவி தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கு மத்தியில், இஸ்ரேலிய இராணுவம் சிரியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. 

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள HTS தலைமையிலான சிரிய இராணுவத்தின் தலைமையகம் மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேலிய பாதுகாப்பு படை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவு வாயிலைத் தாக்கியதாகக் கூறியது. தெற்கு சிரியாவில் ட்ரூஸ் குடிமக்களுக்கு எதிரான ஆட்சியின் முன்னேற்றங்களையும் நடவடிக்கையையும் தற்போது கண்காணித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தெற்கு சிரியாவில் ட்ரூஸ் ஆதிக்கம் செலுத்தும் நகரமான ஸ்வீடாவில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் நடந்துள்ளன. அங்கு அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் பிரிவுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்துள்ளது. ட்ரூஸ் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் எனக் கூறியுள்ளது. தற்போது, சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம் நெதன்யாகு எச்சரிக்க விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?