செம மாஸ்... இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக .... விண்வெளியில் முளைத்த விதை!
இஸ்ரோ சார்பில் சமீபத்தில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி -சி60 ராக்கெட்டில் நாசா பல ஆய்வு பொருட்களை வைத்து அனுப்பியது . இதில் முக்கியமானதுதான் 'சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூல்' (CROPS). இந்த ஆய்வு பொருட்களில் சிறிய வகை பயிர் விதைகளும் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. விண்வெளியில் பயிர்களை வளர்க்க முடியுமா? என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆய்வு மாட்யூல் அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகள், விண்வெளியில் தாவரத்தை வளர வைத்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தியா தற்போது தான் சொந்தமாக CROPSதான் முதல் சோதனை.
இஸ்ரோ அனுப்பி வைத்த மாட்யூலில், சிறிய பயிர்களின் விதை, அது முளைக்க தேவையான மண், ஹெர்மெட்டிலி சீல் செய்யப்பட்ட யூனிட், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வாயு பரிமாற்றத்தை அளிவிட சென்சார்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ற ஹைட்ரோபோனிக் அமைப்புகள், விதைக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்க தானியங்கி அமைப்பு, விதையின் வளர்ச்சியை கண்காணிக்க உயர்திறன் கொண்ட கேமரா, விதை செடியாக முளைத்தால் அதை அளவிட ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த விதை தற்போது முளைத்திருக்கிறது. இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில், நாம் அனுப்பி வைத்த விதை ஒன்று விண்வெளியில் முளைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த ஆய்வின் மூலம் ஈர்ப்பு விசையே இல்லாத பகுதிகளில் செடிகள் எப்படி வளர்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படி வளரும் செடிகள், பூமியில் ஈர்ப்பு விசையில் வளரும் செடியுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது? எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது? என்னென்ன வேறுபட்டிருக்கிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளவும் இந்த ஆய்வு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மனித இனம் விண்வெளிக்கு போக வேண்டிய சூழல் உருவானால் இன்னொரு கோளுக்கும், இன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கியும் போக வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படியிருக்கும்போது நமக்கு தேவையான உணவை நாமே தயாரிக்க வேண்டியது வரும். மட்டுமல்லாது புதிய கிரகத்தில் நாம் சாப்பிடும் வகையான உணவுகள் இல்லாமல் இருக்கலாம். எனவே பூமியிலிருந்து பயிர்களை உயிருடன் அங்கு கொண்டு செல்ல திட்டமிடல் அவசியம். இது குறித்த அறிவு நமக்கு இருந்தால்தான் மற்ற கிரகங்களில், பூமியில் விளையும் பயிர்களை வளர்க்க முடியும். இதற்கான அறிவை பெறும் பணியில்தான் இஸ்ரோ தற்போது ஈடுபட்டு வருகிறது. அதேபோல அதிக கதிர்வீச்சு, அதிக அழுத்தம், குறைந்த நீர் உள்ள பகுதிகளில் செடிகள் எப்படி வளர்கின்றன என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!