100கிமீ விட வேகமாக போனாலும் கவலையில்ல... 300 வார்த்தை கட்டுரை தயார்....இளைஞரின் பகீர் வீடியோ!

 
கார்

 இன்றைய இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி பல நேரங்களில் அவர்களே ஆபத்தில் சிக்கி விடுகின்றன. அதே அளவு ஆபத்து சாலைகளில் செல்வோருக்கும் ஏற்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே Porsche விபத்து குறித்த வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  அதில், கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தனக்கு எந்த கவலையும் இல்லை எனக் கூறுகிறார்.  அவர்  கஜோதர் சிங் கூல்  தனது மெர்சிடீஸ் காரை 80 முதல் 103 கிலோமீட்டர் வேகத்தில் அச்சமின்றி காரை இயக்குகிறார்.


மேலு  காரின் வேகத்தை அதிகரித்து, “எப்படியும் ஓட்டலாம். எனக்குத் தெரியும்  நான் 300 வார்த்தைகளில் ஒரு கட்டுரை தயார் செய்து வைத்திருக்கிறேன். இப்போது யாரும் என்னைத் தடுக்க முடியாது” என  பெருமிதம் வேறு. இவர்  புனேவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் கல்யாணி நகரில் இரு IT இளைஞர்கள் மோதி, விபத்து ஏற்படுத்தினார். அத்துடன் இவர் விபத்து நடந்த 15 மணி நேரங்களில் ஜாமீன் பெற்றார்.
புனேவில் 12 ம் வகுப்பில்  தேர்ச்சி அடைந்த சிறுவன்  நண்பர்களுடன் பப்களில் மது அருந்திவிட்டு  மே 19 ம் தேதி கல்யாணி நகரில் 2 பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  நீதிமன்றம் சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் 15 நாட்கள் யெர்வாடா போக்குவரத்து காவல்துறையுடன் பணிபுரிய வேண்டும் எனத் தெரிவித்தது.


அத்துடன் விபத்துக்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். மது பழக்கத்திற்கு சிகிச்சை பெற வேண்டு எனக் கூறியது. இந்த தண்டனை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சமீபத்தில் வெளியான  வீடியோவில் இருக்கும் நபர் நான் கட்டுரை எழுதி தயராக வைத்துள்ளேன் என இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.  அந்த வீடியோ இது 8,44,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 1.2 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றுள்ளது .  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!