உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு முழுசா 3 நாள் கூட ஆகல... திருச்செந்தூரில் ரூ.100 சிறப்பு தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தரை கடித்து குதறிய நாய்!

 
திருச்செந்தூர் நாய்க்கடி நாய்கடி திருச்செந்தூர் நாய்க்கடி நாய்கடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தரை நாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் கவலை நிலவியுள்ள நிலையில் சம்பவம் பாதுகாப்பு குறைவைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை காலமாக இருந்ததால் நேற்றும் பக்தர்கள் திரளாகத் திரண்டனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்த முத்துராமன் (60) என்ற முதியவர் உறவினருடன் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்து உள்ளே சென்றிருந்தார்.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் இடையே ஓய்வெடுத்து அமர்ந்து கொண்ட நிலையில், கோவில் உள்பிரகாரத்தில் இருந்த நாய் ஒன்று திடீரென முத்துராமனின் காலை கடித்தது. இதில் அவர் காயமடைந்தார். உடனடியாக கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி மற்றும் தடுப்பூசி போடப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த தடுப்பூசி தேவைப்படுவதால் அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

இன்று காலை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ரேபிஸ் பாதிப்பு அச்சம் நிலவியுள்ள நிலையில் கூடுதலான கண்காணிப்பிற்காக அவரை உள்நோயாளி பிரிவில் அனுமதித்துள்ளனர்.

திருச்செந்தூர்

கோவில் உள்பகுதிக்கு நாய் எப்படி புகுந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு, சுத்தம், கண்காணிப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் ஏற்பட்டதாக பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சம்பவத்தால் கோவில் வருகை தரும் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!