ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை! நீதிமன்றம் உத்தரவு!

 
டெட் உயர்நீதிமன்றம்

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் பெரும் வரவேற்பளித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.  இந்நிலையில், டெட் தேர்வுககளில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிந்து கொள்ளலாம் என்கிற நிலை இருந்து வந்தது.

டெட்

தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிய டெட் தேர்வு கட்டாயம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு பிறகு  ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெட்

 மேலும் 2011 ஆகஸ்ட் 27க்கு முன் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web