தோல்வி பயத்தில் பிரதமர் மோடி தடம் புரள்வது பிரச்சாரத்தில் தெரிகிறது... நாராயணசாமி ஆவேசம்!

 
நாராயணசாமி

 

பிரதமர் மோடி தடம் புரண்டு இருப்பது மூன்று கட்ட தேர்தல் பரப்புரையில் தெளிவாக தெரிகின்றது. இந்தியா கூட்டணி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும். அப்போது  கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஒன்று கூடி பிரதமரை தேர்வு செய்வார்கள் என்று இன்று செய்தியாளர்களிடையே பேசினார். 
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுவையின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ நாட்டில் இப்போது மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

நாராயணசாமி மோடி

இந்த மூன்று கட்ட தேர்தலிலும், தேர்தல் துறை பல முயற்சிகள் எடுத்தும் வெப்பம் காரணமாக அவர்கள் எதிர்பாத்த வாக்கு சதவீதம் உயரவில்லை என்றவர், மூன்று கட்ட தேர்தலிலும் மோடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி வருகின்றார். அவர் பிரதமர் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி வந்து தரம் தாழ்ந்து பொய் பிரச்சாரம் செய்கின்றார் என்றும் இதிலிருந்து மோடி நிலை தடுமாறி 10 ஆண்டுகால ஆட்சியின் பட்டியலை சொல்ல முடியாமல் குழம்பிபோய் மோடி தடம் புரண்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது” என்றார். 

மோடி
மேலும், “மூன்றாண்டு புதுச்சேரி பாஜக அரசின் சாதனை பூஜ்ஜியம் தான் என்றும், தேர்தல் நேரத்தில் மக்கள் கேள்விக் கேட்கத்தொடங்கிவிட்டார்கள். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும், சொத்துக்களை மக்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் இது ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது என்றவர், ரங்கசாமிக்கு சவால் விடுகின்றேன் மூன்றாண்டு அரசின் சாதனையை பட்டியலிட முடியுமா? எனக் கேள்வியெழுப்பியவர் ரங்கசாமி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, மூன்றாண்டு காலம் மக்களுக்கு சோதனையாக உள்ளது என சாடியவர், புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதற்கு பள்ளிகளின் உட்கட்டமைப்பு சரியில்லாததே காரணம்” என்றார்  

 


மூன்று கட்ட தேர்தலிலும் இந்தியாக் கூட்டணி கட்சி முன்னிலையில் உள்ளது, மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் வந்துள்ளார்கள். 7 கட்ட தேர்தல் முடிந்தவுடன் இந்தியா கூட்டணி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும் அப்போது இந்தியா கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஒன்று கூடி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக தேர்வு செய்வார்கள், எனது விருப்பம் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பது என்றார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web