அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது... இந்திய வெளியுறவுத் துறை!

 
மோடி டிரம்ப்

அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும்  ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ”குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நாடுகள் முதலில் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கில் உள்ளது” என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி முடிவுகள் சந்தையில் கிடைக்கும் விலை மற்றும் உலகளாவிய சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் எரிசக்தி தேவைகளை உறுதிப்படுத்தவும்,  மக்களுக்கு மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்யவும்  இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு  பாரம்பரிய எண்ணெய் விநியோகங்கள் ஐரோப்பாவுக்கு திருப்பிவிடப்பட்டதால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.  

பல்லேடியம் உலோகத்தையும், அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியம் ஹெக்ஸா ஃப்ளூரைடையும் ரஷ்யாவிடம் இருந்துதான் அமெரிக்கா வாங்கி வருகிறது.  இந்தியாவை குறிவைப்பது நியாயமற்ற மற்றும் பொருத்தமற்றது .  இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என வலியுறுத்தியுள்ளது.  

ட்ரம்ப் மோடி

இந்த அறிக்கையில், ஜெய்ஸ்வால் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக பாதுகாத்தது. அத்துடன், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?