அதிர்ச்சி... ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி ஐ.டி. ஊழியர் பலி!

 
ரயில்வே ஊழியர்

 திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி ஐடி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை ஜெயமாதா நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (48). 

ரயில்

சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த சுதாகர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பதற்காக ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சுதாகர் தவறி விழுந்துள்ளார். இதில் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web