அடுத்த 4 நாட்களும் வறுத்தெடுக்க போகுது வெயில்... மாலையில் மழைச்சாரல்!

 
வெயில் , மழை

அடுத்து வரும் 4 தினங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும், மாலை நேரங்களில் மழைச்சாரல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கைந்து தினங்களாகவே பல மாவட்டங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வெப்பத்தின் அளவு நூறு டிகிரியைத் தாண்டி வருகிரது. கரூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மக்கல் கடும் வெயிலினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் காலை 11 மணியில் இருந்து மாலை 3மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் மழை

இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக  அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மே 21ம் தேதி முதல்  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை மே  22 மற்றும் நாளை மறுதினம் மே 23ம் தேதியும் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும்.

மழை

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக  38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மே 23 தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் இந்த பகுதிகளில்   மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web