’விரைவில் அணு ஆயுதப் போராக மாறும்’.. நேட்டோ நாடுகளை எச்சரித்த ரஷ்ய அதிபர்!

 
புதின்

உக்ரைனுக்கு ஆயுத ஆதரவை வழங்குவதில் நேட்டோ நாடுகள் எல்லை மீறக் கூடாது என்றும், ரஷ்யாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில், இந்தப் போர் விரைவில் அணு ஆயுதப் போராக மாறும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதன் காரணமாக இந்தப் போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், அதேவேளை ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் நினைப்பது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதின்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா 2022ல் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்து போரை துவக்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம், நிதி உதவி செய்து வருவதால், ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவாலை அளித்து வருகிறது. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது இந்த யுத்தத்தின் போக்கு ரஷ்யாவிற்கு சாதகமாக சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web