21 அடி உயரம்.. 4,000 பொம்மைகள்... சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பக்தர்கள்!

 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

தமிழகம் முழுவதும் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர்  கோவிலில் சுமார் 4,000 பொம்மைகளுடன் மிக பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொலுவை திரளான பக்தர்களும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவம் முன்னிட்டு நேற்று 21 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கொலு வருகின்ற அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.  கொலு வைக்கப்பட்டிருக்கும் இந்த 9 நாட்களிலும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் தீபாரதனையும் காட்டப்படும். 

ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சியை வணங்கக்கூடியாது தான் இந்த நவராத்திரி இந்த கொலுவில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகவிஷ்ணு உள்ளிட்ட அனைத்து சாமிகள், உயிரினங்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!