அச்சச்சோ... போலி தளத்தில் சிக்கிய அஜித் மனைவி ஷாலினி!

 
ஷாலினி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ஷாலினி. இவர் மட்டுமல்ல, அண்ணன் ரிச்சர்ட், தங்கை ஷாமிலி என அனைவரும் குழந்தைகளாக நடிக்க ஆரம்பித்தனர். தமிழ் படங்கள் மட்டுமின்றி பல மலையாள படங்களிலும், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஷாலினி. அதேபோல பருவ வயதை அடைந்ததும் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஷாலினி.

அஜித் குடும்பம்

தமிழில் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ஷாலினி, அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே ஹிட் ஆன ஷாலினி, இதைத் தொடர்ந்து அஜித்துடன் நடித்த அமர்க்களம், மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார்.

முன்னணி நடிகையாக இருக்கும்போதே தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து முற்றிலுமாக விலகிய ஷாலினி, பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் கூட வராமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதன் மூலம் தனது குடும்பத்தினரின் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஷாலினியின் பெயரை தவறாக பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் அவரது பெயரில் போலியான எக்ஸ் பக்கத்தை உருவாக்கியுள்ளார். சுமார் 80.1K பின்தொடர்பவர்கள் போலிப்பக்கதை  பின்தொடர்கின்றனர். இந்த தகவலை ஷாலினியின் கவனத்திற்கு கொண்டு செல்ல, இது குறித்து எச்சரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான X பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு, இது தனது அதிகாரப்பூர்வ X பக்கம் இல்லை, எனவே யாரும் பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web