சுங்கச் சாவடிகளில் அரைமணி நேரமாகிறது... தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
சுங்கச்சாவடி

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்திச் செல்ல அரைமணி நேரமாவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கவலை தெரிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி  தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

சுங்கச்சாவடி

அந்த மனுவில்,” எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.  

இந்த மனுவின் மீதான  விசாரணையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை, “தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான்.

சுங்கச்சாவடி

மதுரை, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளை வாகனங்கள் விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி எதுவுமில்லையா? இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது