மன அழுத்தம்... நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
நர்சிங் மாணவர் சண்முகவேல்

நர்சிங் மாணவர், அதிக மன அழுத்தம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலம் மோதிலால் நகர் கிராஸ் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், சண்முகவேல் (23), சினிவாசன் (19) என்ற என்ற 2 மகன்களும் தாயும் உள்ளனர். 

Manoj Kumar Lal appointed as the new DGP of Puducherry State | புதுச்சேரி  மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமனம்

சண்முகவேல் பி.எஸ்.சி. நர்சிங் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். சண்முகவேல் ஒரு வாரத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுச்சேரியில் வேலை பார்க்கப் போவதாக கூறி மூலக்குளத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். சண்முகவேலுடன் சினிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்துள்ளார்.

மேலும் சண்முகவேல் அவரது நண்பர்களிடம் மனஅழுத்தமாக இருப்பதாக போன் மூலம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார். கல்லூரியில் சண்முகவேலுக்கு மனஅழுத்ததுக்கு மருத்துவ ஆலோசனை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வீடு சுத்தம் செய்து எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். மாலை 5 மணிக்கு மேல் விட்டை சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றான். நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால், சீனிவாசன் பண்முகவேலின் போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. பின்னர் இரவில் சீனிவாசன் மேலே சென்று கதவை சூட்டியபோது திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... களியக்காவிளை அருகே  பரபரப்பு!

அப்போது சண்முகவேல் மின்விசிறியில் நைலான் கயிரில் தூக்கு போட்டுக் தொங்கி கொண்டு இருந்தான். உடனே சீனிவாசனும் பக்கத்தில் இருந்தவர்களும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேலை மீட்டு கொண்டு சென்றனர். அப்போது சண்முகவேலை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர். இது குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சண்முகவேல் மன அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web