“தவறு தான்...” ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்!

 
பிரகாஷ் ராஜ்

ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது.

ஆன்லைன் ரம்மி

இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார்.

பிரகாஷ் ராஜ்

விசா​ரணை நடந்து முடிந்த பின்​னர் பிர​காஷ்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் பேசுகையில், “2016ல் நான் ஒரு செயலிக்கு பிரமோஷன் செய்​தேன். அந்த செயலி 2017ல் ஆன்​லைன் சூதாட்ட செயலி​யாக மாற்​றப்​பட்​டது. இதனை அறிந்து அந்த ஒப்​பந்​தத்தை நான் ரத்து செய்து கொண்​டேன். தெரிந்து செய்​தா​லும், தெரி​யாமல் செய்தாலும் தவறு, தவறு ​தான் என்​ப​தால் இது தொடர்​பாக பொது​மக்​களிடம் நான் மன்​னிப்பு கோரு​கிறேன்” என்றார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!