ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்.. சூப்பரான திட்டம்!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இனி அரசாங்கம் ரேஷன் பொருட்களுடன் பணத்தையும் தரும். ஆனால் அதன் பலன் சில ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஒன்றிய அரசுடன் இணைந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசால் பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், அரியானா அரசு பிபிஎல் (BPL) கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) இரண்டு லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக முன்னர் அறிவித்தது. 

ரேஷன்

இது தவிர, ஜூன் 2021-ல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அரசாங்கம் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது. அதற்கு பதிலாக அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.250 வழங்குவதாக அறிவித்தது. தற்போது, இந்த தொகையை அதிகரிக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

அரசாங்கம் எவ்வளவு ரூபாயை உயர்த்த முடியும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த 250 ரூபாயை அதிகரிக்க அரசாங்கம் தொடர் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த தொகை குறித்த பல ஆலோசனைகளுக்கு பின் ஹரியானா அரசு அதனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசின் இந்த மாற்றத்தின் பலனை BPL மற்றும் AAY ரேஷன் கார்டுதாரர்கள் பெறுவார்கள். இதன் மூலம் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

Ration

இது தவிர, ஒன்றிய அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வசதியும் கிடைத்து வருகிறது. நடப்பு ஆண்டிலேயே இலவச ரேஷனை வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது, அதாவது நீங்கள் ஆண்டு முழுவதும் ரேஷனுக்காக பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web