ஜாக்பாட்... தங்கம் விலை மேலும் சரிவு... சவரனுக்கு மீண்டும் 320 ரூபாய் குறைந்தது!

 
தங்கம்

இன்று காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கங்கத்தின் விலை சவரனுக்குரூ.320 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்றும் விலை குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.  ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தில் முதலீடு செய்வதில் பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இல்லத்தரசிகளின் சேமிப்பில் தங்கம் வாங்குவது முதல் சாய்ஸாக இருக்கிறது. 

தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகிறார்கள். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.

 

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,640-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் குறைந்து, ரூ.4,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

 

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web